அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

09 December 2011

VLC Player ல் குறிப்பிட்ட வீடியோ பகுதியை மட்டும் வெட்டி எடுப்பதற்கு

கணினி  பயன்படுத்துபவர்கள் அனைவரும் VLC Playerஐ பற்றி அறிந்திருப்பார்கள்.VLC Player ஐப் பயன்படுத்தி காணொளி ஒன்றின்(Video) தேவையான பகுதி ஒன்றை எவ்வாறு வெட்டி எடுக்கலாம் என்று காண்போம்.
                                                           

VLC Player இல் காணொளி ஒன்றை திறந்து கொள்ளுங்கள். பின் View->Advanced Controls என்பதை தெரிவு செய்யுங்கள்.நீங்கள் தெரிவு செய்தவுடன் சில பொத்தான்கள் தோன்றும். இப்போது காணொளியின் தேவையான இடத்தில் Record பொத்தானை அழுத்துங்கள்.


பின் வெட்ட வேண்டிய பகுதியின் இறுதிப் பகுதி வந்ததும் மறுபடியும் Record பொத்தானை அழுத்துங்கள்.இப்போது காணொளியின் வெட்டப்பட்ட பகுதி உங்கள் கணினியில் சேமிக்கப்பட்டுவிடும்.


இயங்கு தளம் Windows 7 எனில், My Videos இல் சேமிக்கப்படும் இந்த வீடியோ பகுதி சேமிக்கப்பட்டு விடும். இந்த முறையைப் பயன்படுத்தி ஒலிக்கோப்புகளில் இருந்தும் தேவையான பகுதியை வெட்டி எடுக்கமுடியும்

1 comment:

  1. very good post... i downloaded some waste soft wares for video cutting in my blog

    http://pangusanthaielearn.blogspot.com/ to upload my videos....

    ...this is very simple and awesome .......thx a ton.

    ReplyDelete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)