அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

28 March 2012

கூகிளின் இருவழி பாதுகாப்பு நடைமுறை

இணையத்தில் அனைத்து சேவைகளுக்கும் கூகிளை பிரதானமாக பயன்படுத்துபவர்களுக்கு

கூகிள் எக்கவுண்ட் இன் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்டை பத்திரமாக பாதுகாக்கவேண்டியது அவசியமானது. ஏனெனில் உங்கள் கூகிள் கணக்கு ஹேக் செய்யப்பட்டால் எல்லாவற்றையும் இழக்க வேண்டிய சந்தர்ப்பம் வரலாம்.


உதாரணமாக ஜிமெயில் சேவையில் ஆபிஸ் மின்னஞ்சல் முகவரி மற்றும் தனியான பிஸ்னஸ் மின்னஞ்சல் என எல்லாவற்றையும் இணைத்து பயன்படுத்துபவர்களாயின் ஹேக் செய்யப்படும் போது எதையுமே பயன்படுத்த முடியாமல் போகலாம்.

இதனைத் தவிர்ப்பதற்கென்றே கூகிள் புதிதாக இருவழி பாதுகாப்பு நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. கூகிளில் பாஸ்வேர்ட் கொடுத்து லாகின் செய்தாலும் நீங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட் போனில் இயங்கும் அப்பிளிகேஷன் மூலம் உருவாக்கி தரப்படும் இலக்கங்களையும் கொடுத்த பின்னரே கூகிள் கணக்கில் நுழையமுடியும்.

ஒரு கணனியில் 30 நாட்களுக்கு சேமிக்கப்பட்டிருக்கும் இந்த இலக்கத்தின் மூலம் அதிக பாதுகாப்பு கிடைக்கிறது. அத்துடன் ஹேக் செய்யும் சந்தர்ப்பமும் மிக குறைவு.

இதனது மேலதிக விபரங்களை இங்கே காணலாம்.

2 comments:

  1. வலைப்பதிவர்கள் அறிந்திருக்க வேண்டிய முக்கிய தகவல் இது.கண்டறிந்து சொன்னதற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)