அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

04 March 2012

இணைய பக்கங்களின் படங்களை Disable செய்வது எப்படி?

நீங்கள் குறைந்த வேகம் உள்ள டயல் அப் அல்லது GPRS மூலம் இணையம் உபயோகிப்பவராக இருந்தால் உங்கள் இணைய உலாவி இணைய பக்கங்களில் உள்ள படங்களை தோன்ற செய்வதால் மிகவும் வேகம் குறைவாக இருக்கலாம். நீங்கள் கட்டுப்படுத்த பட்ட பாண்ட்விட்த் திட்டத்தை உபயோகிப்பவராக இருந்தால் பக்கங்களில் தேவை இன்றி படங்கள் தோன்றுவது உங்கள் பாண்ட்விட்த் விரைவில் காலி ஆகலாம். இணைய பக்கங்களில் படங்கள் தோன்றுவதை தடுப்பதன் மூலம் இதற்கு தீர்வு காணலாம்.

இதை இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் எப்படி செய்வது?

1. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் Tools மெனுவை கிளிக் செய்யுங்கள்.
2. Options தேர்வு செய்யுங்கள்
3. தோன்றுகின்ற டேப்களில் "Advanced" தேர்வு செய்யுங்கள்.
4. அதில் Mulitimedia என்ற பிரிவில் "Show Pictures" என்ற ஆப்சனை எடுத்து விடுங்கள்.
5. Ok கிளிக் செய்யுங்கள்.

இன்டர்நெட் எக்ஸ்ப்லோரரை மூடிவிட்டு திரும்ப ஓபன் செய்யுங்கள். இனிமேல் இணைய பக்கங்களில் படங்கள் தோன்றாது.





பயர்பாக்ஸில் (Firefox) எப்படி செய்வது?

1. பயர் பாக்ஸில் Tools மெனுவை கிளிக் செய்யுங்கள்.
2. Options தேர்வு செய்யுங்கள்
3. Load images automatically என்ற ஆப்சனை எடுத்து விடுங்கள்.
5. Ok கிளிக் செய்யுங்கள்.

மூடிவிட்டு திரும்ப ஓபன் செய்யுங்கள். இனிமேல் இணைய பக்கங்களில் படங்கள் தோன்றாது.

கூகிள் குரோமில் இதனை செய்வது எப்படி?

கூகிள் குரோமில் இதனை செய்வது சற்றே நுணுக்கமான விஷயமாகும்.

1. Desktop -பில் உள்ள குரோம் ஐகானை காப்பி பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்
2. புதிய ஐகானை “Google Chrome - Disable Images” என்று Rename செய்து கொள்ளுங்கள்.
3. புதிய ஐகானில் வலது கிளிக் செய்து கொன்று "Properties" தேர்வு செய்து கொள்ளுங்கள்.
4. அதில் "Target" பகுதியின் இறுதியில் -disable-images என்பதனை சேர்த்து விடுங்கள்.
5. OK கிளிக் செய்யுங்கள்.


“Google Chrome - Disable Images” என்ற ஐகானை ஓபன் செய்தால் படங்கள் இல்லாமல் இணைய பக்கங்களை காணலாம்.

2 comments:

  1. உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி இணையத்தளத்தில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். இது தமிழ்மணம் பரப்புகிறோம் என்று கூறிக்கொண்டு உங்கள் படைப்புக்களை உங்களிடமே பணம் கறந்து பிரசுரிக்கும் கீழ்த்தர சேவை இல்லை.முற்றிலும் இலவசமான உங்கள் பங்களிப்பை மட்டுமே கொண்ட சேவை.மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள முகவரிக்கு செல்லுங்கள் http://www.googlesri.com/2012/03/blog-post_4830.html

    ReplyDelete
  2. அருமையான தகவல் சகோ. நான் Nokia PC Suit (GPRS) பயன்படுத்தித்தான் பதிவுகள் இடுவதும், பின்னூட்டங்கள் இடுவதுமாய் இருக்கிறேன். மிகவும் ஸ்லோ கனெக்ஷன். நான் பயர்பாக்ஸ் பயன்படுத்துகிறேன். நீங்கள் சொன்னபடி செய்தேன். இப்போது திறக்காத தளங்களும் எளிதாக திறக்கிறது. அருமையான டிப்ஸ் கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி! தொடரட்டும் உங்களது சேவை!

    ReplyDelete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)