அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

23 April 2012

யாரைத்தான் நம்புவதோ? | இணையம்(FIREFOX)

சில இணைய தளங்களைப் பார்வையிடும் போது நமக்குத் தெரியாமலேயே நமது கணினியில் வைரஸ் போன்ற சில தேவையற்ற மென்பொருட்களை நிறுவி விடுகின்றன. சில தளங்கள் ஏமாற்று வேலைகளில் ஈடுபடுகின்றன. இப்படிப்பட்ட இணைய தளங்களில் இருந்து நம்மையும் நமது கணினியையும் காப்பாற்றிக் கொள்ள "Web of Trust" உதவுகிறது. இது ஃபயர்பாக்ஸின் நீட்சியாகும்(add-on). இந்த நீட்சியை தரவிறக்கம் செய்ய
                                  இங்கு  செல்லவும்.
"Web of Trust" எல்லா இணைய தளங்களையும் மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளது. இந்த நீட்சி, முகவரிப் பெட்டியின் அருகில் ஒரு பாதுகாப்பு வளையத்தைச் சேர்க்கும். அது பச்சை நிறத்தில் இருந்தால், அது பாதுகாப்பான தளம். சிவப்பு நிறத்தில் இருந்தால், பாதுகாப்பற்ற தளமாகும். மஞ்சள் நிறத்தில் இருந்தால், கொஞ்சம் கவனம் தேவை

இதன் சிறப்பு என்னவென்றால், கூகிள், யாகூ போன்ற தேடு பொறிகளில் தேடிடும் போதே, முடிவுகளில் வரும் இணையதளங்களின் பாதுகாப்பு அளவை காட்டி விடுவதால், அந்த தளங்களுக்குச் செல்லாமலே நமது கணினியைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.

ஃபயர்பாக்ஸ் பயனர்கள் மட்டுமே இதை உபயோகிக்க முடியும்.

5 comments:

  1. நான் fire fox ம் பயன்படுத்துகிறேன்.
    நன்றி நண்பரே.

    ReplyDelete
  2. நன்றி நண்பா

    ReplyDelete
  3. சிறந்த பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி .

    ReplyDelete
  4. நன்றி நண்பரே.

    ReplyDelete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)