அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

01 August 2015

Yahoo அறிமுகம் செய்யும் அட்டகாசமான மொபைல் அப்பிளிக்கேஷன் (வீடியோ இணைப்பு)

இணைய சேவை மற்றும் மின்னஞ்சல் சேவைகளை வழங்கிவரும் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான யாகூ நிறுவனம் Livetext எனும் அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்துள்ளது.Livetext எனும் இந்த அப்பிளிக்கேஷனின் ஊடாக வீடியோ குறுஞ்செய்தி சேவையினைப் பெற்றுக்கொள்ள முடியும்.



அதாவது நண்பர்கள் அல்லது உறவினர்களை வீடியோவின் ஊடாக அவதானித்தவாறே குறுஞ்செய்திகளை அனுப்ப முடியும்.

இச் சேவையினை ஹாங்ஹொங், தாய்வான், அயர்லாந்து ஆகிய நாடுகளில் பரிசோதனைக்கு உட்படுத்திய நிலையில் தற்போது அமெரிக்கா, ஐக்கிய ராஜ்ஜியம், கனடா, ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் அறிமுகம் செய்துள்ளது.

இந்த அப்பிளிக்கேஷனை Android மற்றும் iOS சாதனங்களில் நிறுவிப் பயன்படுத்த முடியும்.

1 comment:

  1. பயனுள்ள தகவல்
    சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    புதிய முகவரியில் மீண்டும் சந்திப்போம்!
    http://yppubs.blogspot.com/2015/08/blog-post.html

    ReplyDelete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)