நாம் பயன்படுத்தும் மின்கல சாதனங்களை எப்படி ஆற்றல்மிக்கதாகவும், சிக்கனமாகவும் பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
வெப்பத்தை தவிருங்கள் :

நீங்கள் எந்த வகை மின்கல சாதனங்களை பயன்படுத்தினாலும் அதை தேவை படும்போது மட்டுமே அதனை உறைகளில் இருந்து வெளியே எடுங்கள்.மற்ற நேரங்களில் அதை பாதுகாப்பாக அதற்கான உறையிலே வைத்திருங்கள்.வெப்பம்தான் மின்கலத்தின் முதல் எதிரி , நீங்கள் மடிக்கணினியை பயன்படுத்தாமல் வெளிய வைத்திருந்தால்,வெளிவெப்பம் ஊடுருவி மின்கலத்தில் வேதியல் மாற்றங்கள் நிகழும்.இதனால் மின்கலத்தின் சக்தி வீணாகும். நீங்கள் மின்கலத்தை குளுமையாக வைத்திருந்தால் ,மின்கலம் நீடித்து உழைக்கும்.நினைவில் கொள்ளுங்கள் .
பயன்படுத்தாத சிறப்பு அம்சங்களை நிறுத்துங்கள் :
மடிக்கணினி : (LapTop)
BlurTooth,Wi-Fi போன்றவை சிறப்பான அம்சங்கள்தான் உங்கள் கணினிக்கு.ஆனால் இவை அதிகமான சக்தியை பயன்படுத்துகின்றன . தேவை இல்லாத நேரத்தில் இவற்றை நிறுத்தி வையுங்கள். இதனால் மின்கலத்தின் சக்தியை சேமிக்கலாம்.திரையின் செறிவையும் (Intensity) குறையுங்கள்.மேலும் DVD Drive மற்றும் USB Flash Drive ஆகியவற்றை பயன்படுத்தவில்லை என்றால்,அவற்றை முதலில் அகற்றுங்கள்.
அலைபேசி : (CellPhone)
திரையின் செறிவை நிறுத்துங்கள் அல்லது குறையுங்கள்.

எண்ணியல் படக்கருவி : (Digital Camera)
மின்கலத்தின் சக்தி குறைவாக இருக்கும்போது ,எடுக்க போகும் படத்தின் முன்னோட்டம் பார்க்க உதவும் LCD திரை வசதியை நிறுத்தி விடுங்கள்.மேலும் மின் விளக்கை(Flash) நிறுத்தி விடலாம் இது மேலும் பல படங்கள் எடுக்க உதவும்.
வன்தட்டை வாட்டதீர்கள் :
உங்கள் மடிக்கணினியில் அடிக்கடி வன்தட்டை வதைக்காதீர்கள்.வேண்டிய மட்டுமே பயன்படுத்துங்கள்.நீங்கள் Ipod அல்லது Mp3 player போன்ற சாதனங்கள் பயன்படுத்தினாலும் இது பொருந்தும்.ஒரு பாடலை next,previous மற்றும் shuffle போன்றவற்றில் மாற்றுவதற்கும் ப்ளய்ளிச்த் பயன்படுத்துவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.Playlist நிறைய சக்தியை சேமிக்கும்.

சும்மா சும்மா ஆப் பண்ணாதீங்க:
நீங்கள் laptop,cellphone அல்லது Digital camera எதை பயன்படுத்தினாலும் .அதை அடிக்கடி ஆப் செய்து ஆன் செய்யாதீர்கள்.நாம் செல்போனை அவ்வளவாக ஆப்-ஆன் செய்யமாட்டோம். ஆனால் செல்போனில் கூட Offline அல்லது Airplane போன்றவற்றை தேர்ந்தெடுக்கலாம் . மடிக்கணினியில் நிறைய பேர் செய்யும் தவறு இதுதான்.நீங்கள் ஒருதடவை ஆப் செய்து ஆன் செய்யும் போது,நிறைய மின்கல சக்தி வீணாகின்றது.இதற்கு பதில் Hiberanate தேர்ந்தெடுங்கள்.
ஒவ்வொரு புகைப்படம் எடுத்த பிறகும் உங்கள் காமெராவை ஆப் செய்து விடாதீர்கள்.அதற்கு பதில் LCD திரையை ஆப் செய்து ஆன் செய்யுங்கள்.

இது போன்ற சின்ன சின்ன மின்கல சக்தியை சேமிக்கும் முறைகளை செய்து,நமது மின்கலத்தை நீடித்து உழைக்க வைக்கலாம்.
DEAR BROTHER,
ReplyDeleteKINDLY ALLOW THIS COMMENT.
THANK YOU.
.
அவசியம் சொடுக்கி >>>>>> பதிவர்களே, வாசகர்களே தமிழ்மணத்தில் ஒரு தில்லுமுல்லு ஆள்மாறாட்ட வைரஸ். <<<<< படியுங்கள்
.
.
அருமையான, பயனுள்ள செயதிகள்.
ReplyDeleteThank you very much for sharing...
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.....
உங்கள் தளத்தில் தமிழ் மணம் ஓட்டு பட்டை இல்லை,
இருந்திருந்தால் சில இனைய சைக்கோகள் மைனஸ் ஓட்டு போடுவாகள் ..
நான் ஒவ்வொரு முறையும் உங்கள் தளத்துக்கு வரும்போது " இன்டிலி"
மற்றும் "தமிழ்"10 இல் பிளஸ் ஓட்டு போடுகிறேன் காரணம் இத் தளம் SUPER..
என் பெயர் Nasarnavas .....BOYCOTT TAMIL MANAM THIRATTI
நன்றி நண்பா என்றும் உங்கள் அன்பை தேடி அன்பு
ReplyDeleteஅனைவருக்கும் பயன்படும் பதிவு நண்பா தொடருங்கள் ...
ReplyDeleteபிடித்திருந்தாலும், இல்லையென்றாலும் ‘கருத்து’ வழங்கச் சொல்லுகிற உங்கள் மனப் பக்குவம் பாராட்டுக்குரியது.
ReplyDelete